follow the truth

follow the truth

June, 27, 2025
Homeவிளையாட்டுபங்களாதேஷ் அணியின் முதல் இன்னிங்ஸிற்காக 247 ஓட்டங்கள்

பங்களாதேஷ் அணியின் முதல் இன்னிங்ஸிற்காக 247 ஓட்டங்கள்

Published on

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருடன் இணைந்ததாக, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே கொழும்பு SSC மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இடம்பெற்று வருகிறது. 

அதன்படி, நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, சற்றுமுன்னர் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 247 ஓட்டங்களை பெற்றுள்ளது.

பங்களாதேஷ் அணி சார்பாக ஷட்மன் இஸ்லாம் 46 ஓட்டங்களையும், முஷ்பிகுர் ரஹீம் 35 ஓட்டங்களையும் லிட்டன் தாஸ் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித பெர்ணான்டோ 3 விக்கெட்டுகளையும், விஷ்வ பெர்ணான்டோ மற்றும் தினுஷ ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியுள்ளனர்.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

150 ஓட்டங்களை கடந்த பெத்தும் நிஸ்ஸங்க

சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று...

மீண்டும் ஒரு சதத்தை பதிவு செய்த பெதும் நிசங்க

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. போட்டியின் நாணய சுழற்சியில்...

பங்களாதேஷ் – இலங்கை 2வது டெஸ்ட் முதல்நாள் ஆட்டம்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட...