follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP2ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க தாக்குதல் – முழுமையான அழிவு ஏற்படவில்லை

ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க தாக்குதல் – முழுமையான அழிவு ஏற்படவில்லை

Published on

கடந்த வார இறுதியில் ஈரானில் உள்ள மூன்று முக்கிய அணுசக்தி தளங்கள் மீது மேற்கொண்ட அமெரிக்காவின் தாக்குதல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தினாலும், அவை முழுமையாக அழிக்கப்படவில்லை என சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) தலைவர் ரஃபேல் க்ரோஸி தெரிவித்துள்ளார்.

ஜூன் 13ஆம் திகதி, ஈரான் அணு ஆயுதங்கள் தயாரித்து வருவதாகக் கூறி இஸ்ரேல், தெஹ்ரானின் அணுசக்தி மற்றும் இராணுவ வளாகங்களை தாக்கியது. அதன் பின்னர் அமெரிக்காவும் இந்தத் தாக்குதலில் சேர்ந்தது. ஈரானின் ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் அணுசக்தி நிலையங்கள் தாக்குதலுக்கு இலக்கானதாக வெளிவந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதல்களில் ஏற்பட்ட சேதத்தின் முழு விவரங்கள் இன்னும் வெளிவராத நிலையில், ஐஏஇஏ தலைவர் க்ரோஸி, “ஈரான், சில மாதங்களுக்குள் தன்னுடைய செறிவூட்டப்பட்ட யுரேனியம் உற்பத்தியை மீண்டும் தொடங்கும் சாத்தியமுள்ள முக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை வைத்திருக்கிறது” என CBS News ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஈரானின் அணுசக்தித் திறன்கள் இன்னும் செயல்பாடுகளுக்கு தக்கதாக இருக்கலாம் எனக் கருதும் முதலாவது நிறுவனம் IAEA அல்ல; இதை ஏற்கனவே அமெரிக்காவின் பென்டகன் அமைப்பும் சுட்டிக்காட்டியுள்ளது.

இவற்றை மறுக்கும் வகையில், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், “ஈரானின் அணுசக்தி நிலையங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டன” என்று தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டெல்லியில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

தலைநகர் டெல்லியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானதாக இந்திய தேசிய...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

X தளத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி இராஜினாமா

எலான் மஸ்க்கின் X சமூக வலைத்தளத்தின் பிரதம நிறைவேற்றதிகாரியாக பணியாற்றிய லிண்டா யாக்காரினோ (Linda Yaccarino) பதவி விலகியுள்ளார். சுமார்...