சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் இன்றைய தினம் கடுமையான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன.
உலக சந்தையில் WTI வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 64.75 அமெரிக்க டொலராக குறைந்து உள்ளது.
இதேபோல், பிரெண்ட் வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 67.61 அமெரிக்க டொலராக வீழ்ச்சி அடைந்துள்ளது.
அதேவேளை, இயற்கை எரிவாயு விலை 3.46 அமெரிக்க டொலராக இன்றைய தினம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இந்த விலை மாற்றங்கள் உலக எரிவாயு மற்றும் எண்ணெய் சந்தைகளில் ஏற்பட்ட மாற்றங்களின் பிரதிபலிப்பு என அறியப்படுகிறது.