விமான கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை,எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்ததன் பின்னர், நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க இந்த உத்தரவை வழங்கினார்.
மேலும், ஜூலை 15ஆம் திகதிக்கு முன்னர் விசாரணைகளை முடித்து, சம்பந்தப்பட்ட உண்மைகள் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நிஷாந்த விக்ரமசிங்க, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன தலைவர் பதவியிலிருந்த போது விமான கொள்முதல் நடவடிக்கைகளில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.