திருத்தப்பணிகள் காரணமாக, கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் 12 மணிநேர நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பின் படி, எதிர்வரும் ஜூலை 7 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நீர்விநியோகம் தடைப்படும்.
அதற்கமைய, பேலியகொடை, வத்தளை, ஜா – எல , கட்டுநாயக்க, சீதுவை நகர சபைக்கு உட்பட்ட பகுதிகள், களனி, பியகம, மஹர, தொம்பே, கந்தானை, மினுவாங்கொடை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நீர்விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.