follow the truth

follow the truth

July, 7, 2025
HomeTOP2காஸா போர் நிறுத்தம் - ஹமாஸ், இஸ்ரேல் பேச்சுவார்த்தை

காஸா போர் நிறுத்தம் – ஹமாஸ், இஸ்ரேல் பேச்சுவார்த்தை

Published on

காஸாவைச் சுற்றி தொடர்ந்து நிலவும் மோதலுக்கு இடையே, 60 நாள் போர்நிறுத்தம் தொடர்பான திட்டத்தை முன்னிலைப்படுத்தி, ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் கட்டாரில் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஹமாஸ் சில திருத்தங்களை முன்வைத்திருந்தாலும், இஸ்ரேல் அவற்றை நிராகரித்து, பேச்சுவார்த்தையைத் தொடரும் வகையில் இன்று கட்டாருக்கு ஒரு அதிகாரிகளின் குழுவை அனுப்பியுள்ளது.

போர் நின்று ஆயிரக்கணக்கான உயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில், கட்டார், எகிப்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தங்களின் மத்தியஸ்த முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுத்துவருகின்றன.

இந்நிலையில், எதிர்வரும் நாட்களில் போர்நிறுத்தத்தில் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எலான் மஸ்க் நிறுவிய புதிய அரசியல் கட்சி : ட்ரம்ப் கடும் அதிருப்தி

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், “அமெரிக்கா பார்ட்டி” என்ற பெயரில்...

பாகிஸ்தானில் அடுக்குமாடி இடிந்து வீழ்ந்த விபத்தில் 27 பேர் உயிரிழப்பு

கராச்சியில் அமைந்துள்ள ஒரு பழைய அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதி இடிந்து வீழ்ந்த சம்பவத்தில் 27 பேர் உயிரிழந்ததாக சர்வதேச...

அரசாங்கத்தின் செயற்குறைவால் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது – சஜித்

நாட்டின் ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிக்கும் அமெரிக்க சந்தையில், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரி கொள்கைகள் காரணமாக...