நாட்டில் உள்ள மாஃபியாக்கள் மற்றும் கட்டுப்பாடில்லா சந்தைப் போக்குகளை கட்டுப்படுத்த, இந்தியாவில் இருந்து கீரி சம்பாவிற்கு ஒத்த ஜீ.ஆர் ரக அரிசி இறக்குமதி செய்யப்பட உள்ளதாக, வர்த்தக மற்றும் வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து 40,000 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த அரிசி ஒரு கிலோகிராம் ரூ. 250 அல்லது அதற்கும் குறைவாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.
சிறுபோக அறுவடையின் பின்னர் நாட்டில் அரிசிக்குத் தேவையான அளவு உற்பத்தியாகும் என நம்பிக்கை இருந்தாலும், சீரற்ற வானிலை மற்றும் பிற காரணங்களால் தட்டுப்பாடு ஏற்பட்டால், இறக்குமதி நடவடிக்கைகள் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சி பொதுமக்களுக்கு மலிவான விலையில் அரிசி கிடைக்க செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.