தேசிய விபத்து தடுப்பு வாரம் நாளை, ஜூலை 7 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை நாடு முழுவதும் செயற்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இவ்வாரத்திற்கான தினவினாக்கள் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளன:
- ஜூலை 7 – வீதி விபத்து தடுப்பு நாள்
- ஜூலை 8 – பணியிடம் தொடர்பான விபத்துகள்
- ஜூலை 9 – வீடு மற்றும் முதியோர் இல்லங்களில் ஏற்படும் விபத்துகள்
- ஜூலை 10 – நீரில் மூழ்கும் விபத்துகள்
- ஜூலை 11 – பாடசாலைகள், முன்பள்ளிகள், பராமரிப்பு மையங்களில் ஏற்படும் விபத்துகள்
இந்த வாரத்தின் முக்கிய நோக்கம், விபத்துகள் குறித்த விழிப்புணர்வை வளர்த்தல், அபாய நிலைகளை கண்டறிதல், மற்றும் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது என அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்களின்படி:
ஒவ்வொரு நிமிடமும் 6-8 இலங்கையர்கள் விபத்தில் சிக்கி சிகிச்சை தேடுகிறார்கள்.
நாட்டில் ஆண்டுதோறும் 10,000-12,000 பேர் விபத்துகளால் உயிரிழக்கின்றனர்.
பெரும்பாலான விபத்துகள் 15-44 வயதுக்குட்பட்டவர்களில் அதிகம் காணப்படுகின்றன.
விபத்துகள் இறப்புகளுக்கான 10வது முக்கிய காரணமாக விளங்குகின்றன.
வாகன விபத்துகள், விலங்கு கடித்தல், சறுக்கி விழுதல், தாக்குதல்கள் போன்றவை அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் முக்கிய காரணங்கள்.
ஆண்டுதோறும் 3,000 தற்கொலை இறப்புகள் மற்றும் விஷமயமாக்கல், நீரில் மூழ்குதல் போன்ற காரணங்களால் ஆயிரக்கணக்கான உயிர்கள் இழக்கப்படுகின்றன.
சுகாதார அமைச்சு, இவ்விபத்துகளை தடுப்பதற்கான திட்டங்களில் அனைத்து தரப்புகளும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளது.