‘ஆமி உபுல்’ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இறந்தவரின் தொலைபேசித் தரவைப் பயன்படுத்தி விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்திருந்தனர்.
இதற்காக பொலிஸ் குழுக்கள் 8 நியமிக்கப்பட்டுள்ளது.
ராகமவில் உள்ள படுவத்தே கிராம சன்வாரன மாவத்தை பகுதியில் கடந்த 3 ஆம் திகதி இரவு ‘ஆமி உபுல்’ சுட்டுக் கொல்லப்பட்டார்.
‘படுவத்தே சாமர’ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளது.
‘ஆமி உபுல்’ ‘கணேமுல்லே சஞ்சீவ’ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் நெருங்கிய சகாவும் ஆவார்.