இணைய வழியாக வாகன வருமான அனுமதிப்பத்திரம் (Revenue License) பெறும் சேவைகள் தற்காலிகமாக செயலிழந்துள்ளன என்று இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) அறிவித்துள்ளது.
ஜூலை 3ஆம் திகதி முதல், ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினால் இந்த சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
ICTA வெளியிட்டுள்ள அறிக்கையின்படி:
“சேவைகள் ஜூலை 9ஆம் தேதி வரை செயலிழந்திருக்கலாம். தொழில்நுட்ப சிக்கலுக்கு தீர்வு காணும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன.”
சேவை இயல்புநிலைக்கு திரும்பியவுடன், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாகன உரிமம் புதுப்பிக்க திட்டமிட்டுள்ள பொதுமக்கள், இந்த தற்காலிக மாற்றத்தை கவனத்தில் கொண்டு திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.