இலங்கையில் ஸ்டார்லிங்க் அதிவேக செயற்கைக்கோள் இணைய சேவைகளை தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், ஸ்டார்லிங்க் நிறுவனர் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே பதிவு செய்திருந்த எக்ஸ் பதிவை மீண்டும் இடுகையிட்டு நேரடி பதில் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
இலங்கைக்கு ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய அணுகலை வழங்கியதற்காக அதன் உரிமையாளர் எலோன் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எக்ஸ் பதிவொன்றினை பதிவிட்டிருந்தார்.
அதில் இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலம் குறித்து விவாதிக்க விரைவில் மஸ்க்கைச் சந்திப்பேன் என்றும் குறிப்பிடப்பட்டது.
அதன்படி, எலோன் மஸ்க்கின் பதில் இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்திற்கு சர்வதேச கவனத்தை ஈர்க்கும் ஒரு நிகழ்வாகும்.
இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதன் நிறுவனர் எலோன் மஸ்க்கை சந்தித்து அதிவேக ஸ்டார்லிங்க் இணைய சேவையை இலங்கைக்கு கொண்டு வர நேரடி பேச்சுவார்த்தை நடத்தினார், மேலும் பொருளாதார கொலையாளிகளை நெருக்கமாகக் கொண்டு வந்ததற்காக அப்போதைய எதிர்க்கட்சி அமைச்சர் சுனில் ஹந்துன்னெட்டியால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விமர்சிக்கப்பட்டார்.
இருப்பினும், தற்போதைய நிர்வாகத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதியின் முயற்சிகள் வெற்றி பெற்ற நிலையில், அமைச்சர் அத்தகைய அறிக்கைகளை வெளியிட்டதாகத் தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.