கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு விசாரணை நடத்த தீர்மானித்துள்ளது.
இச்சம்பவத்தில், 22 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார், மேலும் ஒருவர் காயமடைந்து சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, பொலிஸார் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம், ஒரு மாதத்திற்குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு எழுத்துப்பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளது.
சம்பவம் குறித்து விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படவுள்ளன எனவும், பொலிஸாரின் நடவடிக்கைகள் குறித்த உண்மை வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.