முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு, துபாயில் இருந்து செயல்படும் பாதாள உலக தலைவரிடமிருந்து தொலைபேசி மூலம் பல கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று (06) இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த அழைப்பில், அவர் அமைச்சராக இருந்தபோது தப்பிச் சென்ற பாதாள உலகத் தலைவர்களையும் உறுப்பினர்களையும் நாடு திரும்ப அழைத்த நடவடிக்கையை முன்னிட்டு, கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து, பொலிஸ் மா அதிபர் அனைத்து விசேட பிரிவுகளுக்கும் அவசர தகவலை அனுப்பியுள்ளதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன.