follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP1தேர்தல் ஆணையத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

தேர்தல் ஆணையத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

Published on

கொழும்பு – தேர்தல் ஆணையத்தின் அனைத்து மின் சேவைகளும் இன்று (07) முதல் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இடைநிறுத்தம் செய்யப்பட்ட சேவைகள்:

  • வாக்காளர் பட்டியல் தகவல்களைச் சரிபார்த்தல்
  • ஆன்லைன் பதிவு
  • வாக்காளர் அறிக்கைகள் பெறுதல்
  • பிற மாவட்டங்களுடன் தொடர்புடைய தகவல்களைப் பெறுதல்
  • அனைத்து சேவைகளும் மறு அறிவிப்பு வரும் வரை அணுக முடியாது எனவும், பொதுமக்கள் இந்த இடைநிறுத்தத்தால் ஏற்படும் அசௌகரியங்களை பொறுமையுடன் சகிக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் சேவைகள் மீண்டும் வழமைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...