follow the truth

follow the truth

July, 7, 2025
Homeலைஃப்ஸ்டைல்இதையெல்லாம் காலை உணவாக சாப்பிடவே கூடாதா?

இதையெல்லாம் காலை உணவாக சாப்பிடவே கூடாதா?

Published on

வழக்கமாக, காலை உணவுதான் மிகவும் முக்கியம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வரும் அதே வேளையில், அதைத்தான் பெரும்பாலுமான மக்கள் தவிர்ப்பது அல்லது சமரசம் செய்துகொள்வது என்று போகிறது.

இரவு உணவுக்குப் பிறகு மிக நீண்ட இடைவெளி விட்டு எடுத்துக் கொள்ளும் காலை உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள், அன்றைய நாள் முழுமைக்குமான ஒரு ஓட்டத்துக்குத் தேவையான சத்தான உணவாக காலை உணவு அமைய வேண்டும் என்று பலரும் பல காலமாக சொல்லி வந்தாலும், காலையில் சாப்பிட முடிவதேயில்லை.. வெறும் டீ அல்லது காபிதான் என்று சொல்பவர்களும் ஏராளம்.

சிலரோ இதுதான் மிகச் சிறந்த காலை உணவு என்று நினைத்துக் கொண்டு கண்டதையும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையிலேயே, பலரும் இதுதான் காலை உணவு என்று சொல்லி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் 6 உணவுகளைத்தான் சாப்பிடவே கூடாது என்று மருத்தவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

1. காபி அல்லது தேநீருடன் பிஸ்கட்
பலருடைய வீடுகளில் இதுதான் காலை உணவு அல்லது கண் விழித்ததும் வயிற்றுக்குள் போடும் உணவாக உள்ளது. ஆனால் இதுதான் உடலுக்கு மிகவும் தீங்கானது என்கிறார்கள். இதில் எந்த சத்தும் இல்லை. வெறும் கார்போஹைட்ரேட் மட்டும்தான் இருக்கிறது. தொடர்ந்து பசியோடும், வெறும் சர்க்கரை அளவை அதிகரிக்கவும் மட்டும் உதவும்.

தேநீர் அல்லது காபி சாப்பிட்ட பிறகு சத்தான காலை உணவை கட்டாயம் சாப்பிட வேண்டும், பிஸ்கட் பதிலாக உலர்ந்த பருப்பு வகைகள் அல்லது முட்டை சாப்பிடலாம்.

2. பிரட் ரோஸ்ட் – பழச்சாறு
இதைப் பற்றி ஒன்றுமே சொல்ல முடியாது. மிகச் சிறந்த உணவு என்றுதானே நினைக்கிறோம். இல்லை. இது முழுக்க முழுக்க சர்க்கரை அண்டான் என்றுதான் சொல்ல வேண்டும். புரதமோ நார்ச்சத்தோ இல்லை. இன்சுலின்தான் அதிகரிக்கும். இதற்குப் பதிலாக முழுமையான பழத்தை சாப்பிடலாம். வெறும் ரொட்டிக்குப் பதிலாக முட்டை சாப்பிடலாம். நாள் முழுமைக்கும் சக்தி தரும்.

3. பாலுடன் கார்ன்ஃபிளாக்ஸ்
கடையில் விற்கப்படும் செரல்ஸ் அல்லது கார்ன் பிளாக்ஸ் போன்றவற்றை பாலில் ஊறவைத்து சாப்பிடுவது சத்தானது என்று நினைத்திருந்தால் தவறு. அது முழுக்க முழுகக் சர்க்கரை நிறைந்தது. கெட்டுப்போகாமல் இருக்க பிராசசிங் செய்யப்பட்டிருக்கும். இதற்குப் பதில் வீடுகளில் தயாரிக்கப்படும் சத்து மாவு உருண்டை அல்லது கஞ்சியைப் பயன்படுத்தலாம்.

4. சான்ட்விச்
ரொட்டியில் காய்கறிகளை வைத்து சாப்பிட்டால் அது மிகச் சிறந்த உணவு என்றுதான் நினைக்கிறோம். இல்லை என்கிறது உண்மை நிலவரம். மைதா போன்றவற்றால் தயாரிக்கப்படும் ரொட்டியுடன் கெட்டுப்போகாமல் இருக்க அதிகப்படியான பிராசசிங் நிரப்பப்பட்ட சாஸ்களை இணைத்து செய்யும் சான்ட்விச் எப்போதும் கெடுதல்தான். அதில் ஒரு சில இலை தழைகளை வைத்துவிட்டால் அதனை சத்தானதாக மாற்றிவிட முடியாது. ரத்தத்தில் சர்க்கரை அளவுதான் அதிகரிக்கும்.

ஒருவேளை தானிய ரொட்டி அல்லது சிறுதானிய ரொட்டியில் எந்த டப்பாவில் அடைக்கப்பட்ட சாஸ்களையும் சேர்க்காமல் முட்டை, காய்கறிகள் அல்லது பன்னீர் சேர்த்து சாப்பிடலாம்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தலை முடி ஈரமாக இருக்கும்போது இந்த தவறுகளை செய்யாதீங்க

முடி ஈரமாக இருக்கும்போது, ​​முடியின் வேர்கள் திறந்திருக்கும் மற்றும் முடி அமைப்பு பலவீனமாக இருக்கும். இந்த நேரத்தில், தீவிரமாக...

அவசர அவசரமா சாப்பிடுறவங்க இத கொஞ்சம் கவனியுங்க

பொதுவாக அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் போது ஒரு நபர் மட்டும் சில வினாடிகளிலேயே சாப்பிட்டு முடித்து விடுவார். இப்படி...

பாடசாலை மாணவிகளுக்கான சுகாதார நாப்கின் விநியோகம்

2025ஆம் ஆண்டில், பாடசாலை மாணவிகளுக்கான சுகாதார நாப்கின் விநியோகத் திட்டம், நான்கு அதிகாரப்பூர்வமாக சான்றளிக்கப்பட்ட வர்த்தக நிறுவனங்கள் மூலம்...