follow the truth

follow the truth

July, 7, 2025
HomeTOP2“ஒரு அழகான வீடு - ஒரு வளர்ந்த குடும்பம்" வரிசை வீடு ஒழுங்குபடுத்தும் திட்டம் ஆரம்பம்

“ஒரு அழகான வீடு – ஒரு வளர்ந்த குடும்பம்” வரிசை வீடு ஒழுங்குபடுத்தும் திட்டம் ஆரம்பம்

Published on

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை முன்னிட்டு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக “ஒரு அழகான வீடு – ஒரு வளர்ந்த குடும்பம் ( சொந்துரு நிவசக் – விகசித பௌலக்” வரிசை வீடுகளை திருத்தும் திட்டம் நேற்று (06) கஹவத்தை ஓபாத தோட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஒரு அழகான நாடு மகிழ்ச்சியால் நிறைந்த மக்களை உருவாக்குவதற்கான
கிளீன் ஸ்ரீலங்கா தேசிய திட்டத்தை முன்னிட்டு நாட்டின் மலையக மக்களை முன்னேற்றுவதற்காக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு அதன் பங்குதாரர்களுடன் இணைந்து இந்தத் திட்டத்தை மேற்கொள்கின்றது.

இந்த வரிசை வீடு ஒழுங்குபடுத்தும் திட்டத்தின் கீழ் வரிசை வீடுகளை சுத்தம் செய்து வர்ணம் பூசி, சுவர்கள் மற்றும் கூரைகளை சரிபார்த்து, இத்துப் போன கூரைத்தகடுகளை அகற்றி புதிதாக கூரைத் தகடுகளை பொருத்துதல் அல்லது முழுமையாக குறைகளை சரி செய்தல், சிரமதானத்தின் ஊடாக சுற்று வட்டத்தை சுத்தமாக பேணுதல், நீர் வளங்கள் கட்டமைப்பை முறைப்படுத்துதல், தபால் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் ஒவ்வொரு வீடுகளுக்காகவும் தனிப்பட்ட முகவரிகளை வழங்குதல், தபால் விநியோகிக்கும் ஊழியர்கள் ஊடாக ஒவ்வொரு வீடுகளுக்கும் கடிதங்கள் கிடைப்பதை உறுதி செய்தல், பிறப்பு, திருமண சான்றிதழ் இல்லாதவர்களுக்காக பிரதேச செயலகம் மற்றும் பதிவாளர்களின் ஒத்துழைப்புடன் அந்த பிறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களை வழங்குவதற்கு அவசியமான வசதிகளை வழங்குதல், மலையக மக்களின் மனப்பாங்கு அபிவிருத்தி மற்றும் கல்வி மட்டத்தை உயர்த்துவதனால் பண்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக வெளிப்பூட்டல் நிகழ்வுகளை பல்வேறு தலைப்புகளிலும் செயல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

நேற்று (06) முதல் கட்டமாக ஓப்பாவத்தை யில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்திற்கு நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, மாத்தறை, களுத்துறை, காலி, கேகாலை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் பெருந்தோட்டத் துறையுடன் சம்பந்தப்பட்ட 75 வரிசை வீடுகள் மற்றும் 1072 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் இந்த மாவட்டங்களில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக இலங்கை தேயிலைச் சபையின் ஒருங்கிணைப்பில் பெருந்தோட்டத்துறையில் ஈடுபட்டுள்ள ஏற்றுமதியாளர்கள் மற்றும் வர்த்தக சங்கம் மற்றும் நிறுவனங்களினால 112 மில்லியன் ரூபா நிதி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாரம்ப நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட் கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்தின, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திர கீர்த்தி ஆகியோரினால் இவ்வாறு ஒழுங்குபடுத்தலுக்காக அவசியமான பொருட்கள் தோட்ட அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.

ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஊடாக அடையாள அட்டை இல்லாத நபர்களுக்காக அடையாள அட்டை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட தகவல்களும் இதன்போது சேகரிக்கப்பட்டன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்வி சீர்திருத்தங்களின் இலக்கு கல்வியின் தரத்தை உயர்த்துவதாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் போது, பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் முன்னேற்றத்தை...

கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை

தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட...

2,210 கிலோ சட்டவிரோத லன்ச் ஷீட்கள் பறிமுதல்

மத்திய சுற்றாடல் அதிகார சபை, இலங்கை பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் உதவியுடன், நுகர்வோர் விவகாரங்கள் அதிகார சபையுடன் இணைந்து...