தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட 12 பிரதிவாதிகளை எதிர்வரும் 11 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இன்று அழைப்பாணை பிறப்பித்துள்ளது.
பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகளை கையளிக்க நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இவ்வாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டது.