தேசிய விபத்து விழிப்புணர்வு வாரம் இன்று(07) முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படவுள்ளது.
நாட்டில் அதிகரித்துவரும் விபத்துகள் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன் தேசிய விபத்து தடுப்பு வாரத்தை அறிவிக்க நடவடிக்கை எடுத்தது.
தேசிய விபத்து விழிப்புணர்வு வாரத்தின் 05 நாட்களும் 05 பிரிவுகளில் விழிப்புணர்வை வழங்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
முதலாவது நாளில் வாகன விபத்துகள், 2ஆம் நாளில் தொழில்சார் நிறுவன விபத்துகள், 3ஆம் நாளில் வீடுகள் மற்றும் முதியோர் இல்லங்களை அண்மித்து இடம்பெறக்கூடிய விபத்துகள், 4ஆம் நாளில் நீரில் மூழ்கி உயிரிழக்கின்றமை தொடர்பான விபத்துகள், 5ஆம் நாளில் சிறுவர்கள் தொடர்பான விபத்துகள் ஆகிய பிரிவுகளில் விழிப்புணர்வு வழங்கப்படவுள்ளது.
பத்தாவது தேசிய விபத்து தடுப்பு வாரம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் பங்கேற்புடன், சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் இன்று (07) சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.
சுகாதார சேவைகளுக்காக ஒதுக்கப்படும் வருடாந்திர வரவுசெலவுத் திட்டத்தில் கணிசமான சதவீதம் விபத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக செலவிடப்படுவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வருடாந்தம் நாட்டில் சுமார் 1 இலட்சத்து 45 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். அவர்களில் 8 சதவீதமானோர் அதாவது 10 ஆயிரம் – 12 ஆயிரம் பேர் விபத்துக்களால் மரணிப்பதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. மாதாந்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விபத்துச் சம்பவங்கள் பதிவாவதுடன் அண்ணளவாக 30 பேர் உயிரிழக்கின்றனர்.
7 500 – 8000 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் முன்னரே உயிரிழக்கின்றனர். அத்தோடு ஆண்டுதோரும் 3 ஆயிரம் உயிர்மாய்ப்பு சம்பவங்களும் பதிவாகுவதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவு தெரிவித்துள்ளது.