இலங்கையின் வாகன இறக்குமதியை கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பரவியிருந்த சில ஊடக அறிக்கைகளை மறுத்து, இலங்கை மத்திய வங்கி இது தொடர்பாக தெளிவுபடுத்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.
வாகன இறக்குமதியை கட்டுப்படுத்துவது தொடர்பாக, மத்திய வங்கியும் திறைசேரியும் இடையில் எவ்வித கடிதப் பரிமாற்றமும் இடம்பெறவில்லை என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நாட்டில் மேற்கொள்ளப்படும் வாகன இறக்குமதிகள், வணிக வங்கிகளின் வெளிநாட்டு நாணய (டொலர்) இருப்புகளிலிருந்தே மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, இறக்குமதிகள் நாட்டின் மொத்த வெளிநாட்டு நிதி இருப்புக்களை பாதிப்பதில்லை, என்றும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.