கொஸ்கொட மற்றும் பாணந்துறை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொஸ்கொடவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 24 வயது இளைஞர், தற்போது பலபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மூன்று தனிப்பட்ட பொலிஸ் குழுக்களால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பாணந்துறை மாலமுல்ல பகுதியில் இடம்பெற்ற மற்றொரு துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 32 வயது நபரும் தற்போது பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.