அமெரிக்க அரச ஊழியர்களில் 1,300 பேரை பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இவர் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் பதவி ஏற்கும் தருணத்தில் இருந்து பல்வேறு நிர்வாக சீர்திருத்தங்களை முன்னெடுத்து வருகிறார்.
இந்த நிகர்வில், அமெரிக்க வெளிவிவகார துறையில் பணியாற்றி வந்த 1,300 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, உள்நாட்டு சேவைகளில் ஈடுபட்டு வந்த 1,107 பணியாளர்களும், வெளிநாட்டு பணிகளில் இருந்த 246 பணியாளர்களும் பணி நீக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கை, நிர்வாக மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.