கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI), வரலாற்றில் முதன்முறையாக 19,000 புள்ளிகளைக் கடந்ததாக பங்குச் சந்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நேற்றைய (14) வர்த்தக நாளை முடிவில் 18,838.39 புள்ளிகளாக இருந்த ASPI, இன்றைய (15) வர்த்தக தின தொடக்கத்திலேயே 19,000 புள்ளிகளைக் கடந்து புதிய சாதனை படைத்தது.
இந்த வளர்ச்சி, முதலீட்டாளர்களின் நம்பிக்கையும் சந்தையின் புள்ளிவிவர ரீதியான நிலைமையும் வலுவடைந்துள்ளதாக பங்குச் சந்தை வட்டாரங்கள் மதிப்பீடு செய்கின்றன.
இன்றைய வர்த்தக நாளில் இதுவரை பதிவான மொத்த வர்த்தகப் புரள்வு ரூ.1.29 பில்லியனைத் தாண்டியுள்ளதாகவும் கொழும்பு பங்குச் சந்தை மேலும் தெரிவித்துள்ளது.
சமீபத்திய காலங்களில் அரசாங்கத்தின் பொருளாதார ஸ்திரத்தன்மை நடவடிக்கைகள் மற்றும் நிதி மீளுருவாக்கச் செயற்பாடுகள் பங்குச் சந்தை வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.