follow the truth

follow the truth

July, 15, 2025
HomeTOP1ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இடையே தாக்குதல் - ஐவர் வைத்தியசாலையில்

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இடையே தாக்குதல் – ஐவர் வைத்தியசாலையில்

Published on

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில், முதலாமாண்டு மாணவர்கள் மீது மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலின் காரணமாக, 5 பேர் காயமடைந்து வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) இரவு, பல்கலைக்கழக வளாகத்திலேயே இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

தாக்குதலில் 4 முதலாமாண்டு மாணவர்கள் மற்றும் சாரதியொருவர் காயமடைந்துள்ளார்கள்.

இவர்கள் அனைவரும் ஒலுவில் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனுடன் தொடர்புடைய முன்னைய சம்பவங்களில், கடந்த மாதமும் இத்தகைய பகிடிவதைச் செயல்கள் தொடர்பில் 22 மூத்த மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலான காணொளி ஒன்றில், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் குழுவொன்று, முதலாமாண்டு மாணவர்கள் அறைகளுக்குள் நுழைந்து முழந்தாளிடச் செய்து, தாக்குதல் நடத்தியபோது பதிவுசெய்யப்பட்டது.

இந்த சம்பவங்கள் தொடர்பாக, பல்கலைக்கழக நிர்வாகமும், பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்வி நிறுவனங்களில் பகிடிவதை, வன்முறைச் செயல்கள் தொடரும் சூழலில், மாணவர்களின் பாதுகாப்பு மீதான கவலைகள் அதிகரித்து வருகின்றன என பெற்றோர் மற்றும் சமூகவாசிகள் தெரிவிக்கின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

15 மில்லியன் டொலர் முதலீட்டில் வசதிகளுடன் கூடிய ஆய்வகத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய (Accreditation) ஆய்வுகூடமொன்றை நிறுவுவதற்காக அமெரிக்க STEMedical மற்றும் இலங்கை உயிரி தொழில்நுட்ப நிறுவனம் (SLIBTEC)...

‘பால் நிரம்பி வழியும் நாடு’ என்ற பேரில் ஐந்தாண்டு கால்நடைத் திட்டம் ஆரம்பம்

விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்தவின் கருத்தின் பேரில் செயல்படுத்தப்பட்ட ‘பால் நிரம்பி...

NPP-க்கு ஆதரவளித்த பேருவளை SJB உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

பேருவளை நகர சபையின் மேயர் மற்றும் உப மேயர் தெரிவின் போது தேசிய மக்கள் சக்திக்கு (NPP) ஆதரவளித்ததற்காக,...