follow the truth

follow the truth

July, 15, 2025
HomeTOP1'பூர்வீக நிலங்களை விடுவிக்க வேண்டும்' – ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் வலிகாமம் மக்கள் அமைதிப் போராட்டம்

‘பூர்வீக நிலங்களை விடுவிக்க வேண்டும்’ – ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் வலிகாமம் மக்கள் அமைதிப் போராட்டம்

Published on

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் இலங்கை இராணுவத்தால் fortfarande கைப்பற்றியுள்ள நிலங்களை விடுவிக்க வலியுறுத்தி, இன்றைய தினம் (15) கொழும்பில் அமைதியான முறையில் போராட்டம் இடம்பெற்றது.

ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் கோத்தா வீதியில், “எமது பூர்வீக நிலங்களை மீள எமக்கே ஒப்படையுங்கள்” எனக் கோரி, பூர்வீக நில உரிமையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

“எமது பூர்வீக நிலத்தை மீள எம்மிடம் ஒப்படையுங்கள்” என்பதை பிரதானமாக வலியுறுத்தும் இப்போராட்டத்தில் யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் உள்ள பாரம்பரிய நிலங்களை இலங்கை அரச படைகளிடம் இருந்து விடுவிக்க வலியுறுத்தப்பட்டது.

இதன்போது, ‘மண்ணாசை துறந்த புத்தரின் பிள்ளைகளுக்கு மாற்று இனத்தவரின் மண்ணில் ஏன் ஆசை?, எமது மக்கள் வாழ்வாதாரம் இழந்து வாட அரச படைகள் இலாபம் ஈட்டுவது முறையா? , பூர்வீக காணிகளை இழந்த மக்களாக எமது அகதி வாழ்க்கை போதும்’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி மக்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்

மன்னார் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த போராட்டத்தில், விடுவிக்கப்படாத காணிகளின் உரிமையாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலர் பங்கேற்றனர்.

போராட்டம் நடைபெற்ற பகுதியில் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

06 மாத காலப்பகுதியில் 1,44,379 இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு பயணம்

2025ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 1,44,379 இலங்கையர்கள் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்குப் பயணித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு...

15 மில்லியன் டொலர் முதலீட்டில் வசதிகளுடன் கூடிய ஆய்வகத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய (Accreditation) ஆய்வுகூடமொன்றை நிறுவுவதற்காக அமெரிக்க STEMedical மற்றும் இலங்கை உயிரி தொழில்நுட்ப நிறுவனம் (SLIBTEC)...

NPP-க்கு ஆதரவளித்த பேருவளை SJB உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

பேருவளை நகர சபையின் மேயர் மற்றும் உப மேயர் தெரிவின் போது தேசிய மக்கள் சக்திக்கு (NPP) ஆதரவளித்ததற்காக,...