பேருவளை நகர சபையின் மேயர் மற்றும் உப மேயர் தெரிவின் போது தேசிய மக்கள் சக்திக்கு (NPP) ஆதரவளித்ததற்காக, ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சார்ந்த ஆறு உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
SJB பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ கடிதத்தின் மூலம், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மேயர் பதவிக்கு NPP வேட்பாளருக்கு ஆதரவு வழங்கிய இந்த 6 உறுப்பினர்களும், கட்சியின் தீர்மானங்களை மீறியதற்காக பதவித் தகுதியை இழக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளதாகவும் கட்சித் தலைமையகம் வலியுறுத்தியுள்ளது.
இந்த முடிவுக்கு எதிராக, பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள் சட்ட நடவடிக்கைகள் எடுக்கவுள்ளனர் எனவும், நகர சபை நிர்வாகத்தில் இதன் தாக்கம் விரைவில் தெளிவாகும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.