தேசிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபை உறுப்பினர் மற்றும் சட்டத்தரணி தாரக நாணயக்காரவின் வீட்டை இலக்காகக் கொண்டு இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை சுமார் 4.40 மணியளவில் அடையாளம் தெரியாத இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து, துப்பாக்கிச் சூட்டினை நடத்தி பின்னர் தப்பிச் சென்றனர்.
குறித்த பிரதேச சபை உறுப்பினருக்கு ஏற்கனவே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்ததால், அவரது வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வீட்டின் முன் கதவை நோக்கி துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்ட நிலையில், இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நோக்கில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.