இன்று (16) காலை 10.00 மணியளவில் கொழும்பு பங்குச் சந்தையில் தினசரி வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, பல தரகு நிறுவனங்களின் ஆர்டர் மேலாண்மை அமைப்பு (OMS) செயலிழந்ததால் சந்தை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், தினசரி வர்த்தகம் காலை 10.40 மணிக்கு மீண்டும் தொடங்கும் என்று பங்குச் சந்தை மேலும் தெரிவித்துள்ளது.