கிரிக்கெட், 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது என்பதை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) உறுதிப்படுத்தியுள்ளது.
LA28 ஒலிம்பிக் போட்டிகளில்,
🔹 ஆண்கள் மற்றும் பெண்கள் T20 கிரிக்கெட் போட்டிகள்
🔹 ஜூலை 12 முதல் ஜூலை 29 வரை நடைபெறும்.
🔹 பெண்கள் பதக்கப் போட்டி – ஜூலை 20
🔹 ஆண்கள் பதக்கப் போட்டி – ஜூலை 29
இது ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறும் இரண்டாவது முறை ஆகும். இதற்கு முன்பு 1900 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெற்றது. அப்போது கிரேட் பிரிட்டன், பிரான்சை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது.
LA28 கிரிக்கெட் விவரங்கள்:
6 ஆண்கள் அணிகள், 6 பெண்கள் அணிகள் போட்டியிடும்.
ஒவ்வொரு அணிக்கும் 15 வீரர்கள் – மொத்தம் 90 வீரர்கள் பங்கேற்கலாம்.
போட்டிகள் நடைபெறும் இடம்: போமோனா ஃபேர்ப்ளெக்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து சுமார் 50 கிமீ தொலைவில்.
பல நாள்களில் இரு போட்டிகள் நடத்தப்படும்.
இந்த வளர்ச்சி, கிரிக்கெட்டை உலகளாவிய முறையில் பரப்பும் முயற்சிக்கு முக்கியமான அடிக்கல்லாகக் கருதப்படுகிறது.
விராட் கோலி, மெக்லென் ஹீலி, ஜோஸ் பட்ட்லர் உள்ளிட்ட பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், இதை வரலாற்றுச் சாதனையாக வரவேற்றுள்ளனர்.
இதே நேரத்தில், 2028 ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெறும் முறை தொடர்பான விவரங்கள் இன்னும் உறுதியாகப்படவில்லை. இது தொடர்பான முடிவுகள், ஜூலை 17 முதல் சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் ஐ.சி.சி. ஆண்டு மாநாட்டில் தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.