follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2போர் ஓயுமா? - உக்ரைனுடன் பேச தயாராகும் ரஷியா

போர் ஓயுமா? – உக்ரைனுடன் பேச தயாராகும் ரஷியா

Published on

ஐரோப்பிய இராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் சேர உக்ரைன் ஆர்வம் காட்டி வந்தநிலையில் அந்த நாடோடு ரஷ்யா ஜனாதிபதி புதின் போர் அறிவித்து தாக்குதல் நடத்தி வருகிறார்.

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் நிதி கொடுத்தும், ஆயுதங்கள் சப்ளை செய்தும் உதவி வருகின்றன.

ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியா ஆட்களை அனுப்புகிறது. சீனா மறைமுகமாக உதவுவதாக கூறப்படுகிறது. இந்த போரில் பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு அமெரிக்காவில் புதிய ஜனாதிபதிக்கான தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று 2-வது முறையாக அந்த நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றார். முன்னதாக தேர்தல் வாக்குறுதியின்போது ரஷியா-உக்ரைன் இடையேயான போரை நிறுத்துவதாக அறிவித்தார். அதன்படி ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து நேரலையில் உரையாடி அவர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

மேலும் போரை உடனடியாக கைவிடுமாறு எச்சரித்தார். ரஷ்யா ஜனாதிபதி புதினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டும் போர் நிறுத்தத்திற்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும் பல நாடுகள் இந்த போரை நிறுத்த தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன. இருப்பினும் எதற்கும் செவி சாய்க்காமல் இருநாடுகளும் தீவிரமான போர் தாக்குதலில் தொடர்ந்து ஈடுபடுகிறது.

இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தற்போது ரஷ்யாவை உடனடியாக போர் தாக்குதலை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார். இதற்காக 50 நாட்கள் கெடு விதித்துள்ளார். மேலும் அதனை மீறி போர் தாக்குதலை நீடித்தால் கடுமையான பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே ரஷ்யா வின் அதிகாரப்பூர்வ அரசு தலைமையிடமான கிரெம்ளின் மாளிகையின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பத்திரிகையாளர்களை சந்திந்தார். அப்போது அவர் உக்ரைனுடன் புதிய அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவித்தார்.

அவர் கூறுகையில், “உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு எப்போதும் நாங்கள் தயார். ஆனால் எங்களுடைய லட்சியங்கள் ஈடேறும்வரை போர் தாக்குதல் தொடரும். நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேருவதை தவிர்க்க வேண்டும். எல்லை மீறி ஆக்கிரமித்த பகுதிகளை சுதந்திரமாக அறிவிக்க வேண்டும். மேற்கத்திய நாடுகளுடனான தொடர்பை துண்டித்து ராணுவத்தை குறைத்தால் நாங்கள் புதிய அமைதி பேச்சுவார்த்தைக்கு இப்போதும் தயார்” என பேசினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...