follow the truth

follow the truth

July, 22, 2025
HomeTOP2ஜப்பான் மேல்சபை தேர்தல்: ஆளும் கூட்டணிக்கு பெரும் சவால் – பெரும்பான்மை இழக்கும் அபாயம்

ஜப்பான் மேல்சபை தேர்தல்: ஆளும் கூட்டணிக்கு பெரும் சவால் – பெரும்பான்மை இழக்கும் அபாயம்

Published on

ஜப்பானின் நாடாளுமன்ற மேல்சபைக்கான தேர்தல் இன்று நடைபெற்றுள்ளது. இதில், பிரதமர் யோஷிஹிடே இஷிபா தலைமையிலான லிபரல் டெமாக்ரடிக் கட்சி (LDP) மற்றும் அதன் கூட்டணி கட்சியான கோமெயிட்டோ கட்சி, பெரும்பான்மையை இழக்கக்கூடும் என தேர்தல் பிந்தைய கருத்துக் கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

தற்போது ஆட்சி வகிக்கும் இந்த கூட்டணி, மேல்சபையில் ஆட்சி தொடர 50 இடங்களை வெல்ல தேவைப்படுகின்ற நிலையில், தற்போதைய கணிப்புகள் 32 முதல் 51 இடங்கள் வரை மட்டுமே கிடைக்கக் கூடும் என தெரிவிக்கின்றன.
சில பிரதேச ஊடகங்கள் இந்த எண்ணிக்கை 41–43 இடங்களில் இருக்கலாம் என்றும் கணிக்கின்றன.

கீழ்சபையில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் இக்கூட்டணி பெரும்பான்மையை இழந்த நிலையில், மேல்சபையிலும் அதே தோல்வி தொடரும் பட்சத்தில், இது 1999க்குப் பிறகு கட்சி சந்திக்கும் மிக மோசமான முடிவாக கருதப்படும்.

தேர்தலில் தோல்வியுற்றாலும், உடனடியாக ஆட்சி மாற்றம் ஏற்படாது. எனினும், எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு, பொதுத் தேர்தலுக்கான அழுத்தத்தை அதிகரிக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.

விலை உயர்வுகள், வரிச் சுமை – முக்கியக் காரணங்கள்
தற்போதைய தேர்தல் சூழ்நிலை, பல பொருளாதார சிக்கல்களால் தூண்டப்பட்டிருக்கிறது:

  • அரிசி மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு
  • விலைவாசி அதிகரிப்பு
  • அமெரிக்கா விதித்த வரிகள், இவற்றால் தொழில்துறை சிக்கல்களுக்குள்ளாகியுள்ளது
  • இதனால், மக்கள் மீள்சிந்தனை வாக்களிப்புக்கு திரும்பியிருக்கலாம் என சொல்லப்படுகிறது.

எதிர்க்கட்சிகளின் வாக்குறுதிகள்:

  • வரிச் சுமையை குறைக்கும் நடவடிக்கைகள்
  • மக்களுக்கு அதிக நலத்திட்ட செலவுகள்
  • சமூக பாதுகாப்பு திட்டங்களில் அதிக செலவீனங்கள்

அமெரிக்காவுடன் ஒப்பந்தம் – நடுநிலை பாதிப்பு?
இந்நிலையில், LDP – கோமெயிட்டோ கூட்டணி, அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை அமைதியாக நிறைவு செய்ய முயற்சிக்கிறது. ஆனால், தேர்தல் தோல்வி ஏற்படும் பட்சத்தில், இந்த முயற்சிகள் தடைப்படும் அபாயமும் உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியல் வெளியீடு

குறைவான குற்றங்கள் மற்றும் அதிக பாதுகாப்புத் தரநிலைகளைக் கொண்ட உலகின் மிகப் பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. ஒரு...

100 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அரிதான சூரிய கிரகணம் – இருளில் மூழ்கும் பூமி

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது நிகழும் ஒரு வானியல் நிகழ்வு தான் சூரிய கிரகணம். 2027ஆம் ஆண்டு...

யுனெஸ்கோ உறுப்பினர் பதவியிலிருந்து அமெரிக்கா விலகியது

யுனெஸ்கோவிலிருந்து அமெரிக்கா இன்று (22) விலகுவதாக அறிவித்தது. இஸ்ரேல் மீதான அதன் சார்பு மற்றும் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதற்காக இந்த முடிவை...