குறைவான குற்றங்கள் மற்றும் அதிக பாதுகாப்புத் தரநிலைகளைக் கொண்ட உலகின் மிகப் பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
ஒரு நாட்டில் நடைபெறும் குற்ற குறியீடுகள், பாதுகாப்பு குறியீடுகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு அந்த நாட்டின் குற்றச்செயல்களின் அளவைக் கணிப்பதில் Numbeo நிறுவனம் புகழ் பெற்றது.
குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ள 2025 ஆம் ஆண்டு இடைவருட பாதுகாப்பு குறியீட்டு பட்டியலில் இடம் பெற்ற 148 நாடுகளில், அந்தோரா (Andorra), ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகள் முதல் மற்றும் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளன.
கத்தார் 84.6 என்ற பாதுகாப்பு மதிப்பெணுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
வளைகுடாவின் மற்ற நாடுகளான ஓமான் (ஐந்தாம் இடம்), சவுதி அரேபியா மற்றும் பஹ்ரைன் அனைத்தும் 15 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளன. (- இந்நேரம்.காம்)
பட்டியலில் இந்தியா 67 ஆவது இடத்திலும், அமெரிக்கா 89 ஆவது இடத்திலும் இடம் பெற்றுள்ளன.