11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம் : முன்னாள் கடற்படை தளபதி மீதான குற்றச்சாட்டுக்கள் விலக்கப்பட்டன

613

2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உட்பட 11 இளைஞர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம்  தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி, அட்மிரல் ஒஃப் ஃப்லீட் வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல முடியாது என கொழும்பு நிரந்தர நீதாய மேல்நீதிமன்றுக்கு இன்று சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.

இந்த வழக்கு இன்று சம்பா ஜானகி ராஜரத்ன, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன ஆகிய நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டபோது இவ்விடயம் அறிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here