ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் பதில் தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான். இந்த சூழல் மத்திய கிழக்கில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்களை நேற்று(13) நடத்தியது. இதற்கு பதிலடியாக அன்றிரவே இஸ்ரேலை நோக்கி ஏவுகணை, டிரோன்களை வீசி இரான் தாக்குதல் நடத்தியது.
இதேவேளை பெருமளவு ஏவுகணைகள் இஸ்ரேலின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான டெல்அவியை தாக்கின என தெரிவித்துள்ள டெலிகிராவ் இஸ்ரேல் இது பொதுமக்கள் மீதான தாக்குதல் என தெரிவித்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.