கம்போடியா இடையே இன்று திடீரென்று மோதல் ஏற்பட்டு, இருநாட்டு வீரர்களும் எல்லையில் பயங்கரமாக மோதிக் கொண்டுள்ளனர்.
பீரங்கி குண்டுகளால் தாக்கி கொண்ட நிலையில் போர் வெடிக்கிறதா? என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலுக்கு கோவில் ஒன்று தான் முக்கிய காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தாய்லாந்தும், கம்போடியாவும் அண்டை நாடுகளாக உள்ளன. இருநாடுகளும் எல்லைகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தான் தாய்லநாந்தின் வடகிழக்குபகுதியில் உள்ள சுரீன் மாகாணத்தில் பிரசாத் தா மவுன் தாம் எனும் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு கம்போடியா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த கோவில் விஷயத்தில் தாய்லாந்து – கம்போடியா இடையே தொடர்ந்து பிரச்சினை நீடித்து வருகிறது.
இந்நிலையில் தான் எப்போது வேண்டுமானாலும் இருநாடுகள் இடையே மோதல் வெடிக்கலாம் என்ற நிலை உருவானது.
இதையடுத்து தாய்லாந்து சார்பில் எல்லையில் எஃப் 16 ரக போர் விமானங்கள் குவித்து வைக்கப்பட்டது. இந்நிலையில் தான் திடீரென்று இருநாடுகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
கோவில் விவகாரத்தில் இருநாடுகள் இடையே கடும் மோதல் நடந்தது. இருநாட்டை சேர்ந்தவர்களும் மாறிமாறி தாக்கி கொண்டனர். இருநாட்டு வீரர்களும் பீரங்கி குண்டுகளை வீசினர். இதில் சிலர் காயமடைந்துள்ளனர். இந்த மோதல் காரணமாக இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இருநாடுகளும் தங்களின் எல்லைகளை மூடி உள்ளனர். மேலும் தூதரக அதிகாரிகளை வெளியேற தாய்லாந்து, கம்போடியா அரசுகள் உத்தரவிட்டுள்ளன.