2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் 36,000 புற்றுநோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதே காலப்பகுதியில், புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 6,700 என பதிவாகியுள்ளதையும் அவர் கூறினார்.
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த்ராணி கிரியெல்லவின் கேள்விக்கு பதிலளிக்கும் போது, தினசரி சராசரியாக 950 முதல் 1,000 நோயாளிகள் கிளினிக்குகள் சேவைக்காக வருகை தருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.