இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான அதானி குழுமம், இலங்கையில் மேற்கொள்ளவிருந்த காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்திலிருந்து முழுமையாக விலகுவதாக அண்மையில் அறிவித்தமையானது நாட்டின் எதிர்கால முதலீட்டுத் திட்டங்களைப் பாதிக்கக்கூடிய முக்கிய மாற்றமாகவே பார்க்கப்படுகிறதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளராக லெட்சுமனார் சஞ்சய் தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்;
“.. அத்திட்டத்திற்காக அதானி நிறுவனம் ஏற்கனவே மேற்கொண்ட செலவுக்கான நட்டஈடாக, சுமார் ரூ. 500 மில்லியனை அரசாங்கம் வழங்க தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இலங்கை தற்போது அந்தர் செயலாளர் நிதி நெறிமுறைகள் (IMF Reforms) அடிப்படையில் முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், வெளிநாட்டு முதலீடுகள் நாட்டு வளர்ச்சிக்கு முக்கிய அடிப்படையா அமைந்துள்ளன. எனினும், இந்தியாவின் அமுல் நிறுவனத்தையும் அரசாங்கம் வரவழைக்காதது, பால் உற்பத்தித் துறையில் ஒரு பெரிய மாற்றத்தை இழந்ததற்கு சமமானதாகும்.
அதேபோல, அதானி குழுமம் 1 யூனிட் மின்சக்தியை ரூ.21க்கு வழங்கத் தயாராக இருந்தது. ஆனால், அரசாங்கம் அதை ஏற்க மறுத்த நிலையில், தற்போது அவசர தேவைகளுக்காக தனியார் மின் உற்பத்தியாளர்களிடம் ஒரு யூனிட்டுக்கு ரூ.50க்கும் அதிகமாக செலவழிக்கிறது. இது ஏராளமான கேள்விகளை ஏற்படுத்துகிறது.
இந்த வகையான நடவடிக்கைகள், பிற நாடுகளிலிருந்து வரக்கூடிய முதலீடுகளை விரட்டும் அபாயத்தை உருவாக்குகின்றன. வரவிருக்கும் ஆண்டுகளில், இலங்கை பெரும் கடன்களை மீளச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள நிலையில், இதுபோன்ற முதலீட்டுத் திட்டங்களை இழப்பது மிக ஆபத்தானது.
அரசாங்கத்தால் இந்தப்பெரிய நிறுவனங்களுடன் செயல்பட முடியவில்லை என்றால், அதைத் திறந்தவெளியில் ஒப்புக்கொள்க! நாம், நாட்டின் நலனுக்காகவே, அவ்விதமான முதலீட்டுகளை வரவழைக்கும் முயற்சிகளை மேற்கொள்வதற்குத் தயாராக உள்ளோம்..”