அமெரிக்காவின் டென்வர் நகரிலிருந்து மியாமிக்கு புறப்படவிருந்த விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
விமானத்தில் ஏற்பட்ட இந்த அனர்த்தம் காரணமாக அதன் பயணம் உடனடியாக இரத்துச் செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தரையிறங்கும் கியரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே தீவிபத்துக்குக் காரணமாக கூறப்படுகிறது. இதனால் விமானத்தின் டயரில் தீ மற்றும் புகை எழுந்தது.
விபத்து நடந்ததும் விமானம் ஓடுபாதையிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டு, அதில் பயணித்த 173 பேரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இச் சம்பவத்தில் 6 பயணிகள் சிறிது காயமடைந்தனர் எனவும், ஒருவருக்கு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க விமான சேவையைச் சேர்ந்த போயிங் MAX 8 வகை விமானம்தான் இந்த தீவிபத்தில் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.