தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து அங்குணுகொலபெலஸ்ஸ பகுதியில், அதிவேக நெடுஞ்சாலையின் 175ஆவது கிலோமீட்டர் குறியீட்டுக்கு அருகாமையில் இடம்பெற்றது. வேன் ஒன்றின் டயர் திடீரென வெடித்ததால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் 72 மற்றும் 44 வயதுடைய இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்த நால்வரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.