இன்று (28) காலை பொரளை பகுதியில் நிகழ்ந்த கோரமான வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஐந்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து, வேகக் கட்டுப்பாட்டை இழந்த ஒரு கனரக வாகனம் பல வாகனங்களில் மோதியதன் காரணமாக ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
காயமடைந்தவர்கள் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.