இந்தியப் பெருங்கடலில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் பின்னணியில், பொதுமக்களிடையே உள்ள தேவையற்ற அச்சத்தை நீக்குமாறும் கோரப்படுகின்றது.
இன்று (30) காலை ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் 8.8 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்திற்குப் பிறகு, கம்சட்கா தீபகற்பத்தில் 13 அடி உயர சுனாமி அலை எழுந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியிலும் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.