வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய அறிக்கையின்படி, இன்று (30) முதல் நாட்டின் சில பகுதிகளில் வெப்பமான வானிலை நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், வவுனியா மாவட்டம் ஆகியவற்றில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றுமொரு பகுதியில், வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படலாம் எனத் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேலும், மேல், சப்ரகமுவ மாகாணங்கள், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
அத்துடன், தென் மாகாணத்தில், மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.