குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை விமானி ஒருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ருஸ்டம் பகவாகர் எனும் பெயருடைய இந்த விமானி, டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர். அவர் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில், விமானி அறையில் இருந்தபோது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த டெல்டா ஏர்லைன்ஸ் போயிங் விமானம் மின்னியாபோலிஸிலிருந்து புறப்பட்டு, சான் பிரான்சிஸ்கோவில் தரையிறங்கிய சில நிமிடங்களில் இந்த கைது நடைபெற்றது.
குழந்தைகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் ஏப்ரல் மாதம் முதல் ஆரம்பமாகியுள்ளன. அதன் தொடர்ச்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.