சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட, ஹம்பாந்தோட்டை நகரவெவ பறவைகள் பூங்காவின் உரிமையாளர், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (30) ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவருக்கு, ரூ. 2 லட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணைகள் விதித்து நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
அண்மையில், நகரவெவ பறவைகள் பூங்காவிலிருந்து 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சைக்கிள்கள் ஒவ்வொன்றும் சுமார் ரூ. 1.5 மில்லியன் மதிப்புடையதாக இருப்பதுடன், இவை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது