கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் இன்று (31) மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
சட்டவிரோதமான முறையில் போலி ஆவணங்களை வழங்கி பதிவு செய்யப்பட்ட சொகுசு கார் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக அவர் நேற்று(30) வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவில் சரணடைந்தார்.
இதன்போது சுமார் 9 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னர், ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் அபேகுணவர்தன கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக மத்துகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ரொஷேல் அபேகுணவர்தனவின் கணவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.