follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுகண்டியில் A/C கேஸ் வெடிப்பு : இளைஞர் உயிரிழப்பு (VIDEO)

கண்டியில் A/C கேஸ் வெடிப்பு : இளைஞர் உயிரிழப்பு (VIDEO)

Published on

கண்டி – இரண்டாவது ராஜசிங்க மாவத்தையிலுள்ள நட்சத்திர விடுதியில் குளிரூட்டிக்கான வாயு (A/C GAS) வெடித்ததில் இளைஞர் ஒருவர் இன்று  உயிரிழந்துள்ளார்.

ஹோட்டலிலுள்ள குளிரூட்டிக்கான வாயு திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த தருணத்தில், இந்த வெடிப்பு சம்பவம் நேர்ந்துள்ளது.

வெடிப்பு சம்பவத்தில் தீ காயங்களுக்கு உள்ளான இளைஞன், பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குளிரூட்டி வாயு திருத்தப்பணிகள் வெளி நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்த நிறுவனத்தில் பணிப்புரியும் ஊழியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை குழு அறிக்கையை...

முறைகேடு அல்லது மோசடி குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

பொலிஸார் தொடர்பில் ஏதேனும் முறைகேடு அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க பொதுமக்களுக்காக பொலிஸார் அவசர தொலைபேசி...