follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுநாட்டில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 5 பேர் பலி!

நாட்டில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 5 பேர் பலி!

Published on

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் பாடசாலை மாணவன் ஒருவர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

மஹவ, கெத்தபஹுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பன்னல பிரதேசத்தில் சுற்றுவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 28 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரிழந்துள்ளார்.

அதேபோல், ஹபரணை மொரகஸ்வெவ பிரதேசத்தில் 88 வயதான பெண் ஒருவர் பஸ்ஸில் மோதி உயிரிழந்துள்ளார்.

மேலும், ஹுங்கம, படஹத பகுதியில் இனந்தெரியாத வாகனம் மோதியதில் 44 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாத்தறையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த கடுகதி ரயிலில் மோதி 54 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பஸ் கட்டணம் 0.55 சதவீதத்தால் குறைப்பு

எதிர்வரும் 04 ஆம் திகதி முதல் பேருந்து கட்டணம் 0.55 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. எரிபொருள்...

போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க உள்ளிட்ட மூன்று...

ஊழலுக்கு எதிரான பணிகளுக்காக இலங்கைக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கிய ஜப்பான்

ஊழல் எதிர்ப்பு வழிமுறைகளை வலுப்படுத்தவும், பொது நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கவும் ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத்...