கொவிட் சிகிச்சை முறையில் மாற்றம் : புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

929

நாடளாவிய ரீதியில், நோய் அறிகுறியற்ற அபாய நிலை இல்லாத கொவிட் நோயாளர்களை வீட்டில் வைத்து வைத்திய கண்காணிப்பு மேற்கொள்ள முன்னெடுத்த தீர்மானம் இன்று (09) முதல் செயற்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பான வழிகாட்டல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் மாகாண மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, 1390 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக 24 மணித்தியாலமும் நோயாளர்களுக்கு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நோய் அறிகுறியற்ற அபாய நிலை இல்லாத கொவிட் 19 நோயாளர்களை இவ்வாறு வீட்டில் வைத்து கண்காணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடுமையான நோய் நிலைமை ஏற்படுமாயின் அவர்களை விரைவாக வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வீட்டிலேயே வைத்து கண்காணிப்பதற்கு நோயாளர்களது அனுமதி பெறப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

முன்னதாக இந்த நடைமுறை மேல் மாகாணத்தில் இருந்த நிலையில், இன்று (09) முதல் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here