புகையிரத நிலையங்கள் மற்றும் புகையிரத பயணிகளின் பாதுகாப்பிற்காக நாளை முதல் பொலிஸாரை ஈடுபடுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
புகையிரத நிலைய அதிபர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக, இந்த நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, புகையிரத நிலையங்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு, நாளை முதல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.