அதிபர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் சேவை மற்றும் ஆசிரியர் சேவை ஆகியவற்றை தனித்தனி சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டு கல்வி அமைச்சின் செயலாளரினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுச் சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில், குறிப்பிடப்பட்ட சேவைகள் 2021 ஆகஸ்ட் 30 ஆம் திகதி முதல் தனித்தனி சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு சேவைக்கும் குறிப்பிட்ட சம்பளக் கட்டமைப்புகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து உரிய திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.