இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் 06 பேருக்கு கொரோனா

399

கொட்டகலை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமைக் காரியாலயத்தில் பணியாற்றிய ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேற்படி காரியாலயத்தில் ஏற்கனவே 2 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து அங்கு பணிபுரிந்த மேலும் 13 பேருக்கு நேற்று (08) அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோதே மேற்படி ஆறு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களுடன் தொடர்பை பேணியவர்களை சுயதனிமைப்படுத்த கொட்டகலை பொது சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here